தூய ஜெபமாலை அன்னை ஆலயம்
               Radhapuram
MAY GOD'S GRACE BE WITH YOU...ENGLISH
எம்மைப் பற்றி

இந்த இணையதளமானது புனித. தொன்போஸ்கோ இளைஞர் இயக்கத்தி- னரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகி- றது. இராதாபுரம், தூய ஜெபமாலை அன்னையின் பக்தர்கள் இணைய- தளத்தின் மூலமாக தகவல்களைப் பெற இவ்விணையதளம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நம் பங்கின் வளர்ச்சிக்கு இத்தளம் உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இணையதளமானது இராதாபுரம் பங்கின் அதிகாரப் பூர்வ தளம் என்று பங்குத் தந்தை டெ.செ.அன்புச்செல்வன் அவர்களால் அங்கீகரிக்கப்- பட்டுள்ளது.

ஜெபமாலை அன்னை
ஜெபம்
புகைப்படங்கள்
நிகழ்வுகள்
பிற தளங்கள்
தூய ஜெபமாலை அன்னை

இராதாபுரம் பங்கின் பாதுகாவலி தூய ஜெபமாலை அன்னை ஆவார்..

ஜெபமாலை ஒரு மானிடனின் வார்த்தைகள் அல்ல. அவை தூய தமதிரித்துவத்தின் வாழ்த்துக்கள். கபிரியேல் தூதன் கன்னிமரியாளிடம்,

"அருள் நிறைந்தவரே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே !".

என்று வாழ்த்திய உடனே மரியாள் இறைவனின் தாய் ஆனாள். இதுவே ஜெபமாலையின் முதல் வார்த்தைகள். தந்தையாம் இறைவனே தம் தூதர் வாயிலாக மரியாளை வாழ்த்துகின்றார். மரியாள் தம் உறவினளான எலிசபெத்தை சந்திக்க , சக்கரியாவின் இல்லத்திற்கு சென்ற போது எலிசபெத்தை வாழ்த்தினாள். அப்போது மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே அவள் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது!. எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றவராய், மிகுந்த சத்தத்துடன்,

"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பெற்றவர் நீரே! உம் திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!" .

என உரைத்தாள். தூய ஆவியானவரே! இவ்வாறு மரியாளைப் புகழ்ந்தார்.
தூய தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய மகனின் மனித அவதாரத்தின் இரகசியத்தை இந்த ஜெபமாலை கொண்டுள்ளது. நாம் இந்த இரகசியத்தை 20 தேவ இரகசியங்களாக ஜெபமாலை முழுவதும் தியானிக்கிறோம்., மரியாள் இறைவனை புகழ்ந்து,

இதோ! இந்நாள் முதல் எல்லா தலைமுறையும் என்னை பேறுடையாள் எனப் போற்றுமே!,

என பாடினாள். ஜெபமாலை இந்த வார்த்தைகள் இன்றும் நிறைவு பெறச் செய்கிறது. அருள் நிறைந்தவரே! என ஆயிரம் ஆயிரம் முறைகள் நாம் ஜெபமாலையில் அன்னையைப் போற்றுகிறோம்! ஜெபமாலையை நாம் செபிக்கும் போது நம் உள்ளத்தில் எழுகின்ற ஆன்ம அழகை உணரும் போது ஜெபமாலை எவ்வாறு அன்னையுடன் தொடர்புடையது? இந்த பக்தி முயற்சி எங்கு? எப்போது? தொடங்கியது என்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

ஆல்பிஜென்ஸ் என்ற குழுவினர் திருச்சபையை அழிக்க முனைந்தனர். அக்காலமே ஜெபமாலை அருளப்பட்டது என பாரம்பரியம் கூறுகின்றது. கத்தோலிக்கப் படைகள் அன்னையால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என உணர்ந்தவராய் புனித. தொமினிக் தேவதாயாரிடம் வேண்டினார். 1213 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள், புனித ஜேக்குவஸ் ஆலய பீடத்தின் முன் முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டிருந்த தொமினிக்கிற்கு நம் அன்னை தோன்றி, ஜெபமாலையைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல். ஜெபமாலை மட்டுமே தப்பறைகளையும், மக்களின் பாவங்களையும் முறியடிக்கும் ஒரே ஆயுதம் என்று கட்டளையிட்டார்கள். ஜெபமாலையால் ஆல்பிஜென்ஸ் தப்பறை குழுவினர் முறியடிக்கப்பட்டனர். அதற்கு நன்றியறிதலாக அவ்வாலயத்தின் ஜெபமாலை அன்னையின் பீடம் நிறுவப்பட்டு ஆலயம் அன்னையின் பாதுகாவலுக்கு அர்பணிக்கப்பட்டது.

புனித தொமினிக்கின் நாட்களுக்கு முன்னரே ஜெபமாலை வழக்கத்தில் இருந்துள்ளது. துறவற சபையார் 150 சங்கீதங்களைப் பாடுவதற்கு பதிலாக இயேசு கற்பித்த ஜெபத்தை சொல்லி வந்துள்ளனர். மரியன்னையின் துறவற சபையார் இன்றைய அருள் நிறைந்த மந்திரத்தின் முதல் பகுதியை சொல்லி வந்துள்ளனர்.

15 ஆம் நூற்றாண்டு வரை ஜெபமாலை மூன்று ஐம்பது மணிகளாக பிரிக்கப்படவில்லை. 16 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொரு பத்து மணி ஜெபத்திற்கும் தேவ ரகசியங்கள் தியானிக்கும் வழக்கம் அங்கீகரிக்கப்பட்டது.

கி.பி 1569 ஆம் ஆண்டு பரிசுத்த திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர். ஜெபமாலையை இன்று வழங்கப்படும் விதமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் 1571 அக்டோபர் மாதம் 7ஆம் நாள், ஜெபமாலையால் லெப்பான்டோ போரில் ஐரோப்பியர்களுக்கு வெற்றி கிடைத்தது. துருக்கிய படைகளிடம் இருந்து ஐரோப்பா காப்பாற்றப்பட்டது. ஜெபமாலையால் கிடைத்த வெற்றிக்கு நன்றியறிதலாக திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் அன்று ஜெபமாலை அன்னையின் திருவிழாவை ஏற்படுத்தினார். 1573 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் கிரகோரியார் ஜெபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களில் எல்லாம் இத்திருவிழாவைக் கொண்டாட அனுமதியளித்தார்.1671 ஆம் ஆண்டு திருத்தந்தை 10 ஆம் கிளமென்ட் இத்திருவிழாவை ஸ்பெயின் நாடு முழுவதும் அனுமதித்தார். 1716 ஆம் ஆண்டு ஆகஸ்ட் டு 6 ஆம் நாள் ஜெபமாலையின் உதவியுடன் ஹங்கேரிய இள்வரசர் யூஜீன் பீட்டர்வார்டெய்ன் என்ற இடத்தில் துருக்கியரை வென்றார். ஜெபமாலை அன்னையின் திருவிழாவைக் கொண்டாட இனிமேல் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என உணர்ந்த அன்றைய திருத்தந்தை 11 ஆம் கிளமென்ட் அதை ரோமைத் திருச்சபை முழுவதும் கொண்டாட கட்டளையிட்டார்.

திருத்தந்தையர்களான 13 ஆம் பெனடிக்ட் மற்றும் 13 ஆம் சிங்கராயர் ஆகியோர் ஜெபமாலை அன்னையின் திருவிழாவை நிறைவுபலன் தரும் விழாவாக உயர்த்துவதிலும், லொரெட்டாவின் பிரார்த்தனையின் 'திருச் ஜெபமாலையின் இராக்கினியே' என்ற பெயரை இணைப்பதிலும் பங்காற்றியுள்ளனர். 1883 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் தனது சுற்றுமடலில் ஜெபமாலை அன்னையின் பக்தியை புனித. தொமினிக்கின் காட்சியில் இருந்து தொடங்கியது என வரையறுத்துள்ளார்.

பாத்திமாவில் நம் அன்னை 'நான் திருச்ஜெபமாலையின் அன்னை' என மொழிந்த பின் ஜெபமாலையின் பக்தி முழுவதுமாக உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது. நம் அன்னை பாத்திமாவில் காட்சியளித்த அந்த மூன்று சிறுவர்களுக்கும், பின்வரும் வார்த்தைகளை ஜெபமாலையின் ஒவ்வொரு 10 மணிகளின் நிறைவில் சொல்ல கற்பித்தார்.

ஓ! என் இயேசுவே,

என் பாவங்களை மன்னியும்,

நரக நெருப்பில் இருந்து எங்களைக் காப்பாற்றும்,

சகல ஆத்துமாக்களையும் சிறப்பாக உமது இரக்கம் யாருக்கு தேவைப்படுகிறதோ

அவர்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும்.

இவைகளே ஜெபமாலையில் இறுதியாக நம் அன்னையே இணைத்த வார்த்தைகள். எனவே ஜெபமாலை அன்னையைப் பாதுகாவலியாகப் பெற்றிருப்பது நம் பங்கின் பெரும் பேறு.

© All rights reserved. 2010. www.jebamalaimatha.com powered by Mesiver